நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் படமான “எமகாதகி” ஃபர்ஸ்ட் லுக்!!

Published : Oct 06, 2022, 08:54 PM IST
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் படமான “எமகாதகி” ஃபர்ஸ்ட் லுக்!!

சுருக்கம்

கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி தில்லைராக உருவாகியுள்ள “எமகாதகி” திரைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ரஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.  

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில்  இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது. ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்  ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர். 

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். 

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும்,  சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர் இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா வெளியிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!