அட்ரா சக்க... மம்முட்டி மோகன்லாலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! ரசிகர்கள் வாழ்த்து!

Published : Aug 21, 2021, 07:58 PM IST
அட்ரா சக்க... மம்முட்டி மோகன்லாலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!  ரசிகர்கள் வாழ்த்து!

சுருக்கம்

மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக வலம் வரும் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி  வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

தற்போது இந்த விசாவை பெற மோகன்லால் துபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து விரைவிலேயே மம்முட்டியும் துபாய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியே வர ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!