50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கம் இயங்க அனுமதி..! தமிழக அரசு அறிவிப்பு..!

By manimegalai aFirst Published Aug 21, 2021, 7:36 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடி கிடைக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடி கிடைக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதித்தது. இதனால் ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படாமல் உள்ள நிலை ஏற்பட்டது. புதிய படங்களை வெளியிடுவதில் காலதாமதம் ஆவதால், சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் தங்களது படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 23 ஆம் தேதியோடு ஊரடங்கை முடிவடைய உள்ள நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, பல்வேறு தளர்வுகள் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பல மாதங்களாக மூடி கிடைக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அவர்களது வயிற்றில் பால் வார்க்கும் செய்தியை தற்போது அறிவித்துள்ளார், முதலமைச்சர் முக ஸ்டாலின். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!