நல்லெண்ணெய் சித்ராவுக்கு இவ்வளவு நல்ல மனசா? இதற்காக வெளியூர் செல்வதை கூட தவிர்த்து விடுவாராம்!

Published : Aug 21, 2021, 04:48 PM IST
நல்லெண்ணெய் சித்ராவுக்கு இவ்வளவு நல்ல மனசா? இதற்காக வெளியூர் செல்வதை கூட தவிர்த்து விடுவாராம்!

சுருக்கம்

இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975 இல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா. 

இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975 இல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா.  அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் அதிகம் பிரபலமானதால் அனைவராலும் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்கப்பட்டார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர், குடும்பத்தை கவனித்து கொள்வதற்கும், குழந்தையை வளர்ப்பதாகவும் திரையுலகை விட்டு சற்று விலகியே இருந்தார். வாய்ப்புகள் தேடி வந்த போதும் அதனை நிராகரித்துவிட்டார்.

நடிகை சித்ரா கடைசியாக "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில் flash back காட்சியில் ஒரு பள்ளி மாணவியாக நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகியது. கணவர் மற்றும் தன்னுடைய ஒரே மகள் ஸ்ருதியுடன் சந்தோஷமாக வாழ்த்து வந்த இவருக்கு, நேற்று இரவு 12 மணிக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இவரது மகள் ஸ்ருதி இந்த ஆண்டு தான் பிளஸ் டூ முடித்துள்ளார். இவர் குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார் என்பது திரையுலகை சேர்ந்த அனைவரும் அறிந்ததே. 

இன்று மாலை 5 மணிக்கு இவருடைய உடல்  நல்லடக்கம் செய்யப்படும் என்று இவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்த இவருக்கு, பறவைகள் மற்றும் காக்கைகள் என்றால் கொள்ளை பிரியம். தன்னுடைய வீட்டிற்கு தினமும் அழையா விருந்தாளியாக வரும், காக்கைகளுக்கும், புறாக்களுக்கும் மற்ற சில பறவைகளுக்கும் உணவளித்து, தண்ணீர் வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவைகளுக்காகவே வெளியூர் பயணங்களையும் தவிர்த்து விடுவாராம். இவரது மறைவை தொடர்ந்து, இவரை பற்றி பலரும் அறிந்திடாத இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!