பரத் - வாணி போஜன் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

Published : Aug 21, 2021, 07:10 PM IST
பரத் - வாணி போஜன் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

சுருக்கம்

நடிகை வாணி போஜன், பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நடிகர் பரத்துக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமோகமாக துவங்கியது.  

நடிகை வாணி போஜன், பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நடிகர் பரத்துக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமோகமாக துவங்கியது.

வாணி போஜன் சின்னத்திரையை தொடர்ந்து, ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும், இவருக்கு வெள்ளித்திரையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றால், கடந்த ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், மற்றும் வாணி போஜன், நடிப்பில் வேலையான 'ஓ மை கடவுளே' திரைப்படம் தான். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததுதான் அனைவரது நடிப்பும் பாராட்ட பட்டது.

இதை தொடர்ந்து வாணி போஜன், தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக 'பாயும் ஒளி நீ எனக்கு', சசிகுமாருக்கு ஜோடியாக 'பகைவனுக்கு அருள்வாய்' என பிஸியாக வலம் வருகிறார். அதே போல் நடிகர் பரத்துக்கு ஜோடியாக இன்னும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் பூஜையுடன் துவங்கிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைததால் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியது. தற்போது கொரோனா அலை கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசியில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அம்பை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கம் இந்த திரில்லர் படத்தை,  ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி