அரியவகை நோய் பாதிப்பு... 44 வயதில் உயிரிழந்த பிரபல ஒளிப்பதிவாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

By Ganesh A  |  First Published Nov 16, 2022, 8:28 AM IST

அரியவகை நோய் பாதிப்பால் ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு, மரணமடைந்துள்ளது மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


மலையாள திரையுலகில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் சுதீஷ் பப்பு. 2000-த்தில் உதவி ஒளிப்பதிவாளராக தனது பணியை தொடங்கிய சுதீஷ், கடந்த 2012-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான செகண்ட் ஷோ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்தார்.

ஒளிப்பதிவாளர் சுதீஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமிலோய்டோசிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சுதீஷ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... நாகசைதன்யா - அரவிந்த் சாமி மோதல்..! பரபரப்பாக தயாராகும் வெங்கட் பிரபுவின் படம்.!

ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்புவின் மரணம் மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக சுதீஷ் அப்பன் என்கிற மலையாள படத்தில் பணியாற்றி வந்தார். அவரின் மறைவு காரணமாக தற்போது அப்படத்தின் ஒளிப்பதிவு பணியை வினோத் என்பவர் மேற்கொள்ள இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம்

click me!