பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் முக்கிய போட்டியாளர் ஒருவரின் ஷூவில், ப்ளூத் டூத் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து பிக்பாஸ் குழுவினர் பரிசோதனை செய்ததாக மைனா பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது சீசன் கடந்த மாதம் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல்... மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
முதல் வாரத்திலேயே தன்னுடைய மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்த ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேறுகிறேன் என கூறினார். இவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார், பின்னர் அசல் கோளாறும், இவரைத் தொடர்ந்து செரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
போட்டியாளர்கள் குறைந்து கொண்டே சென்றாலும், பிரச்சனைகள் மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் நடந்த டாஸ்கின் போது, முறைகேடாக விளையாடி வெற்றி பெற்ற தவறை சுட்டி காட்டி, தனலட்சுமியை... தொகுப்பாளர் கமலஹாசன் வெளுத்து வாங்கினார். இதற்காக தனலட்சுமி பாத்ரூம் மற்றும் பிக்பாஸ்ஸிடம் அழுது புலம்பிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
Pushpa 2 Movie: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..! யார் தெரியுமா?
நேற்று முதல் புதிய டாஸ்க்கிற்கு தயார் ஆகி உள்ளனர் போட்டியாளர்கள். இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கும், மணிகண்டன் தன்னுடைய ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரது ஷூவை பிக் பாஸ் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்து மைனா நந்தினி 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் எவ்வித வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இது போன்ற பொருட்களை கொண்டு வர கூடாது என்பதே நிபந்தனை ஆகும். இதனை மீறும் விதத்தில் ப்ளூடூத் பொருத்தப்பட்ட ஷூ வை மணிகண்டன் உள்ளே எடுத்து வந்தது விதிமீறல் என்பதால் அவர் வெளியேற்றப்படுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
Bigg Boss took away Manikanta's shoe after he revealed it has Bluetooth connectivity.
pic.twitter.com/WJNlSpedTl