
தமிழ் சினிமா ரசிகர்களால், உலக நாயகன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய 68 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் விதமாக பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், பல முக்கிய பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மதுவுடன் களைகட்டிய இந்த பார்ட்டியில். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக... இயக்குனர் மிஷ்கின், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற 'தென்பாண்டி சீமையிலே'.. என துவங்கும் பாடலை கமல் முன் பாடியுள்ளார். இந்த பாடலை தன்னுடைய தோழி ராதிகா மீது கை போட்டபடி கமல்ஹாசன் ரசித்தார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடி முடித்த பின்னர், கமல் மிஷ்கினை அணைத்தபடி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நடிகர் கமலின் இந்த வீடியோ சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்கிற முறையில் கமல் இப்படி நடந்து கொள்ளலாமா? என சிலர் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.
Pushpa 2 Movie: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..! யார் தெரியுமா?
தற்போது வைரலாகி வரும் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.