மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதே ஆகும் தீபு பாலகிருஷ்ணன், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் உள்ள, இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயிலின் தெற்குக் குளத்தில் காலை 5 மணியளவில் குளிக்க சென்றுள்ளார்.
அதிகாலை 5 மணிக்கு, குளிக்க சென்ற தீபு பாலகிருஷ்ணன், பல மணி நேரம் கழித்து வீடு திரும்பவில்லை. அவருடைய நண்பர்களிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர் ஆனால் யாருக்கும் அவரை பற்றி தெரியவில்லை. பின்னர் அவர் குளிக்க சென்ற இடத்தில் தேடியபோது, குளத்தின் அருகே அவரது உடைகள் மற்றும் காலணிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்து, தேடியபோது இவரது சடலம் மீட்கப்பட்டது. இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு Good Bye சொன்ன டாப் ஹீரோயின்ஸ்! மீண்டும் கம்பேக் கொடுத்தது சிலரே!
தீபு பாலகிருஷ்ணன் மலையாள திரையுலகில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜிஜு அசோகன் இயக்கிய ‘உறும்புகள் உறங்கரில்லா’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றியவர். இப்படத்தில் சிறு வேடத்திலும் நடித்துள்ளார். தீபு பாலகிருஷ்ணன் ‘மனதில் ஒருமுறை’, ‘பிரேமா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.