தயவுசெஞ்சு பெண் சிற்பத்துடன் கூடிய விருது கொடுக்காதீங்க- முதல்வருக்கு மலையாள நடிகர் வைத்த வில்லங்கமான கோரிக்கை

By Ganesh A  |  First Published Sep 15, 2023, 12:24 PM IST

பெண் சிற்பத்துடன் கூடிய விருதை கொடுத்து எங்களை ஏமாற்ற வேண்டாம் என மலையாள நடிகர் அலென்சியர் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரளாவில் மாநில திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப். 14) நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வெற்றியாளர்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் 'அப்பன்' என்கிற படத்தில் நடித்ததற்காக மலையாள நடிகர் அலென்சியர் சிறப்பு ஜூரி விருதை பெற்றார். முதலமைச்சரிடம் விருதினைப் பெற்றுக் கொண்ட அவர் முக்கிய கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார். அதன்படி அவர் கூறியதாவது, "இந்த பெண் சிற்பத்துடன் கூடிய விருதை கொடுத்து எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆளுமையுள்ள முதல்வர் உள்ள மாநிலத்தில், ஆணின் வலிமையுடன் கூடிய சிற்பம் அடங்கிய விருதை எங்களுக்குக் கொடுங்கள்" என்றார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஜெயிலர் வெற்றி.. கார், தங்க காசை தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த Gift - இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!

மேலும் ஆண் சிற்பத்துடன் கூடிய விருதை பெறும் நாளில் நடிப்பதை நிறுத்துவதாகவும் சிறப்பு ஜூரி விருதைப் பெற்ற என்னையும் குஞ்சாக்கோ போபனையும் ரூ. 25,000 கொடுத்து அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து தொகையை அதிகரிக்கவும்" என்று அலென்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் குவிந்தன.

சர்ச்சைக்கு பின் ஏசியாநெட் நியூஸுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது : “"நான் கூறியதில் புண்படுத்தும் வகையில் எதுவும் இல்லை, அது பாலியல் ரீதியானது அல்ல. நான் ஒரு ஆணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் சங்கம் நான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். ஒரு ஆணின் ஆண்மையை சித்தரிக்கும் பரிசை நான் கேட்டேன். ஒவ்வொரு வருடமும் ஒரே சிற்பம் அடங்கிய விருது ஏன் வழங்கப்படுகிறது?" என்று அலென்சியர் கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்... விஜய்யே காசு கொடுத்து சம்பளத்தை 100 கோடியா ஏத்திக்கிட்டாரு! பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகர்

click me!