ஜெயிலர் வெற்றி.. கார், தங்க காசை தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த Gift - இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொடர்ந்து பரிசுகளை வாரி வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது சன் குழும ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி உள்ளார்.
jailer
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், விடிவி கணேஷ், மிர்ணா, வஸந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Rajinikanth
ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் படு குஷியான தயாரிப்பாளர் கலாநிதி மாறன், பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். அந்த வகையில் முதலில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருக்கு செக்கை கொடுத்துவிட்டு, ரூ.1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரையும் பரிசாக வழங்கினார்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தின் அதிரிபுதியான வெற்றியால் மளமளவென உயர்ந்த சன் டிவி பங்குகள்... ஆத்தாடி ஒரே மாதத்தில் இவ்வளவா?
Nelson Dilipkumar
இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த போர்ஷ் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து ஜெயிலர் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் என சுமார் 300 பேருக்கு பிரியாணி விருந்து அளித்ததோடு மட்டுமின்றி அவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கி அமர்க்களப்படுத்தினார் கலாநிதி மாறன்.
Silver Coin
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசை வாரி வழங்கிய கலாநிதி மாறன், தற்போது அடுத்தபடியாக மேலும் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், சன் குழுமத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கு 25 கிராம் வெள்ளிக்காசை பரிசாக வழங்கி இருக்கிறார். அதில் ஒரு பக்கத்தில் சன் பிக்சர்ஸ் என்றும், மற்றொரு பக்கத்தி ஜெயிலர் தி ரெக்கார்ட் மேக்கர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தன் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக கலாநிதி மாறன் செய்துள்ள இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ரஜினி.. நெல்சன்.. அனிரூத்.. இதோட லிஸ்ட் முடியல.. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்!