
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து என்றால் கூறினால், யாருக்கும் சட்டென்று அடையாளம் தெரியாது. ஆனால் அதுவே எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலால் உச்சத்திற்கு சென்றார் மாரிமுத்து என்றால் அது சற்றும் மிகையல்ல என்றே கூறலாம்.
சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த ஒட்டுமொத்த புகழை தாண்டி, எதிர்நீச்சல் என்ற அந்த ஒரே ஒரு சீரியல், அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கையும் கிடைக்கச் செய்தது. கடந்த ஓராண்டில் ஆதி குணசேகரன் பற்றி சோசியல் மீடியாக்களில் போடப்படாத் மீம்ஸே இல்லை என சொல்லும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வந்தார் மாரிமுத்து.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடக்க முடியாமல் தடுமாறிய நிலையில் வலியையும் பொருட்படுத்தாமல் தானே காரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றுள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவர் மறைடைப்பால் இறந்த செய்தி மட்டும்தான் வெளிவந்தது, இந்நிலையில் அவருடன் நடித்த நடிகை ஹரிபிரியா அவரை பெரிய அளவில் மிஸ் செய்து வருகின்றார். காரணம் அந்த சீரியலில் குணசேகரன் மற்றும் நந்தினி இடையே தான் அடிக்கடி சண்டை நடக்கும்.
இந்நிலையில் அவருடன் நடித்த கடைசி கட்சியை வெளியிட்டு, இது தான் நான் அவருடன் கடைசியாக நடித்த காட்சி, யம்மா நந்தினி என்று அவர் என்னை கடைசியாக அழைத்து அந்த நொடி தான் என்று கூறி அவருக்கு பிரியாவிடை கொடுப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் நந்தினி என்கின்ற நடிகை ஹரிப்பிரியா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.