
பிரபல மலையாள ஒளிப்பதிவாளரான மோகனின் மகளான மாளவிகா மோகனன் மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பட்டம் கம்பம் என்னும் படத்தின் மூலம் நாயகியாக தோன்றியவர் தொடர்ந்து மலையாளத்தில் இருப்படங்கள் நடித்துள்ளார். அதை அடுத்து கன்னடம், பாலிவுட் மீண்டும் மலையாளம் என தொடர் படங்களில் நடித்த இவருக்கு பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்தின் இந்த படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்த மாளவிகா மோகன். அதில் ரஜினியின் தோழனாக வரும் சசிகுமாரின் மனைவி பூங்கொடி மாலிக்காக நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு நல்ல பாராட்டுகளை பெற்றது.
பின்னர் மாஸ்டர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பெற்றார் மாளவிகா. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படத்தில் கல்லூரி ஆசிரியராக நடித்திருந்தார். கதையின் முக்கிய திருப்பு முனைக்கு காரணமாக இருக்கும் ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதை அடுத்து தனுஷின் மாறன் படத்தில் தாராவாக நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்தை திடீரென சந்தித்த இயக்குனர் குழு... வைரலாகும் புகைப்படம்
முன்னணி நாயகர்களுடன் நடித்த போதிலும் தமிழில் பெரும்பாலும் இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளிவிகா தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். அதன்படி யுத்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகன். இதற்கிடையே மாலத்தீவிற்கு விசிட் அடித்திருந்த இவரது சூப்பர் கிக் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும்செய்திகளுக்கு...கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்
இந்நிலையில் இவர் லோ நெக் உடையணிந்து பொது இடத்திற்கு வந்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் கேமராவை பார்த்தவுடன் தனது உடையை கீழே இறக்கி விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...இளையராஜா, அனிருத், யுவன், வரிசையில் விஜய் ஆண்டனி... என்ன விஷயம் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.