விஜயகாந்தை திடீரென சந்தித்த இயக்குனர் குழு... வைரலாகும் புகைப்படம்

By Kanmani PFirst Published Sep 20, 2022, 6:58 PM IST
Highlights

தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு, எஸ் ரவிமரியா, விக்ரமன் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

எண்பதுகள் தொடங்கி 2009 வரை முன்னணி நாயகனின் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். பல படங்களும் பிலாபஸ்டர் படங்களாகவே அமைந்தது. 90கலீல் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், கோவில் காளை, சர்க்கரைதேவன், செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், திருமூர்த்தி என தொடர் பிளாக்பஸ்டர் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த விஜயகாந்த், இறுதியாக 2009 ஆம் ஆண்டு எங்கள் ஆசான் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் திரைத்துறையில் இருந்து விலகிய விஜயகாந்த் அரசியலில் முழு நேரமும் பயணிக்க ஆரம்பித்தார். அதன்படி 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் 2016 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மாஸ் காட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் பல இன்னல்களை சந்தித்த விஜயகாந்த் பின்னர் வந்த தேர்தலில் அனைத்திலும் தோல்வியை கண்டார். முதலில் மக்களிடமும், ஆண்டவனுடன் தான் கூட்டணியென கூறிய விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி என்னும் ஒரு கூட்டணியை துவங்கி படுதோல்வியை சந்தித்தார்.

மேலும்செய்திகளுக்கு...கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

இதை அடுத்து அவருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதனால் பெரும்பாலும் வெளியில் வராமலே இருந்தார் விஜயகாந்த். இதற்கிடையே சமீபத்தில் சர்க்கரை நோய் காரணமாக இவரது இரண்டு கால் விரல்களும் ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. இது குறித்தான தகவலும் வெளியானது. தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் பிரபலங்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு, எஸ் ரவிமரியா, விக்ரமன் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இது குறித்தான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...இளையராஜா, அனிருத், யுவன், வரிசையில் விஜய் ஆண்டனி... என்ன விஷயம் தெரியுமா?

TN Film Director’s Association team met Vijaykanth. pic.twitter.com/O2oMLpJy4v

— Christopher Kanagaraj (@Chrissuccess)

 

click me!