
பிகில் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தை தயாரித்த ஏசிஎஸ் சினிமாஸ் நிறுவனம், படத்திற்கு பைனான்ஸ் செய்த பிரபல பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் கடந்த 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்து விஜய்சேதுபதிக்கு வருகிறது ஆப்பு... வாண்டடா வந்து வண்டியில் ஏறும் மக்கள் செல்வன்...!
இந்த சோதனையில் நடிகர் விஜய் உள்ளிட்ட சில திரைத்துறையினர் ஜேப்பியார் மகள் ரெஜினாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதற்காக பல கோடி ரூபாய்கள் கைமாற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் தான் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் விடிய, விடிய சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள். 24 மணி நேரத்திற்கும் மேலாக விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!
இதில் ரெஜினாவுடன் சேர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் மத மாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வடபழனியில் நடைபெற்ற சிறப்பு ஜெப கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் சோசியல் மீடியாவில் வதந்தி பரவியது.
இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!
இதனால் கடுப்பான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் மதம் மாறிவிட்டதாக வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா" என்று ட்வீட் செய்துள்ளார். அத்துடன் மதமாற்றம் தொடர்பாக சோசியல் மீடியாவில் பரவி வரும் ஆங்கில செய்தி ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.
நடிகர் விஜய் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனைக்கு ரசிகர்கள் மட்டுமல்லது திரைத்துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் இந்த ட்வீட் விஜய்க்கு ஆதரவாக போடப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.