Maestro illayaraja next : இசைஞானி இளையராஜா உடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்...

Kanmani P   | Asianet News
Published : Jan 08, 2022, 12:05 PM IST
Maestro illayaraja next : இசைஞானி  இளையராஜா உடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்...

சுருக்கம்

Maestro illayaraja next : இயக்குனர் சுசி கணேசன்  உருவாக்கி வரும் 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் இசைஞானி  இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தன்னிகரில்லா இசைக்கு சொந்தக்காரரான இசை மேதை இளையராஜா தற்போது விடுதலை ,மாயோன், துப்பறிவாளன் 2, அம்மாயி உள்ளிட்ட படங்களில் பிஷியாக உள்ளனர். இதற்கிடையே  இயக்குனர் சுசி கணேசன்  உருவாக்கி வரும் 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் இசைஞானி  இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் படம் 'வஞ்சம் தீர்த்தாயடா'. இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன். இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது.  இதை முன்னிட்டு  இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறியதாவது : 

கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு  ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது " வஞ்சம் தீர்த்தாயடா " படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.

என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில்  உள்ளது. 80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை 'படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக 'இருக்கும். ஒரு இசை மாமேதையுடன் இந்த    புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை " என்றார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு