விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்கபோவது யார்? பர்ஸ்ட் லுக் உடன் வந்த அப்டேட்

By Ganesh A  |  First Published Apr 17, 2023, 1:16 PM IST

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடித்து வருகிறாராம்.


தமிழ் திரையுலகில் வில்லன், ஹீரோ என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 800 என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், பிரபல சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்க இருந்தனர். இப்படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய் சேதுபதி இந்த பயோப்பிக்கில் நடிக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்புகள் அதிகமானதை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க முயற்சித்து வந்த படக்குழு தற்போது அந்த நடிகரை இறுதிசெய்து அப்படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... காதல்துறை அமைச்சர்; உருட்டுதுறை அமைச்சர் யார்.. யார்? பொன்னியின் செல்வன் விழாவில் லிஸ்ட் போட்டு சொன்ன கார்த்தி

அதன்படி 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் என்கிற பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். முத்தையா முரளிதரனின் பிறந்தநாளான இன்று 800 படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இப்படத்தின் ஹீரோயினாக நடிகை மகிமா நம்பியார் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளாராம். 800 திரைப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Here is the Motion poster of my movie #800. The untold story of a living legend 🏏🔥

➡️ https://t.co/G29nioY7ne
pic.twitter.com/YTRwkhlIYs

— Ghibran (@GhibranOfficial)

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் விழாவில் லியோ அப்டேட் சொல்லி அதிரவைத்த ‘குந்தவை’ திரிஷா... அப்படி என்ன சொன்னாங்க?

click me!