Maanaadu | இது சட்டப்படி குற்றம் ; ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மாநாடு இயக்குனர் !!

By Kanmani PFirst Published Nov 28, 2021, 3:20 PM IST
Highlights

Maanaadu | உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 

ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த மாநாடு ஒருவழியாக ஆனால் கடந்த 25-ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பான மாநாடு திரையரங்குகளில் அதிரடி காட்டி வருகிறது.

நீண்ட நாள் கழித்து சிம்புவின் மாஸ் என்ட்ரியான இந்த படம் டைம் லூப் என்னும் கான்சப்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ் பிஜிம், வழக்கமான பில்டப் இன்மை என சிம்பு படத்திற்கான எந்த வித அலட்டலும் இல்லாமல் வெளியாகியுள்ள இந்த படம் சிலம்பரசனின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. 

படம் வெளியானது முதல் இன்று வரை மாநாடு கொண்டாட்டம் ஓயவில்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு சீனையும் அணு அணுவாக ரசித்து வரும் ரசிகர்கள் ஆர்வமிகுதியால் அதனை தங்கள் போனில் ரெகார்ட் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

இது குறித்து இன்று சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள வெங்கட் பிரபு; #Maanaadu மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இது ஒரு குற்றச் செயல்! திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இது ஒரு குற்றச் செயல்! திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் 🙏🏽🙏🏽 https://t.co/7AxX0zf5T7

— venkat prabhu (@vp_offl)

 

click me!