மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இதில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
மாமன்னன் திரைப்படம் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால், இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார். அதனால் மாமன்னன் தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... நிர்வாணம், படுக்கையறை காட்சி என வெப் தொடருக்காக ஆபாச நடிகையாக மாறிய தமன்னா... என்ன சிம்ரன் இதெல்லாம்?
மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் மாமன்னன் படக்குழு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மாமன்னன் படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் நாளை அதாவது ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது... தாறுமாறு கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்
𝟏𝟔.𝟎𝟔.𝟐𝟎𝟐𝟑🔥🥁
Save the date & get ready for the most-awaited … pic.twitter.com/TgpHDjxWdd