நிர்வாணம், படுக்கையறை காட்சி என வெப் தொடருக்காக ஆபாச நடிகையாக மாறிய தமன்னா... என்ன சிம்ரன் இதெல்லாம்?
ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் நடிகை தமன்னா நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்த இவருக்கு தற்போது தமிழில் அந்த அளவுக்கு மவுசு இல்லை. இதனால் உஷாராக பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, அங்கு அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்த வண்ணம் உள்ளார்.
நடிகை தமன்னா நடிப்பில் தற்போது ஜீ கர்தா என்கிற வெப் தொடர் உருவாகி இருக்கிறது. அருணிமா ஷர்மா இயக்கியுள்ள இந்த வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த வெப் தொடரில் டிரைலர் ரிலீஸ் ஆனபோதே இதில் ஆபாச வசனங்கள் இடம்பெற்று இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். தற்போது இந்த வெப் தொடர் பார்த்த பலரும் இது என்ன ஆபாச படம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் இப்படி விமர்சிப்பதற்கு காரணம், இதில் இடம்பெற்றுள்ள நிர்வாண காட்சி மற்றும் ஆபாச வசனங்கள் தான். அதில் நடிகை தமன்னா இந்த நிர்வாண காட்சியில் நடித்துள்ளது தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த வெப் தொடரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தமன்னா ஏன் ஆபாச நடிகையாக மாறிவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... செத்தா... லோகேஷ் கனகராஜ் படத்துல தான் சாகணும் - பிரபல பாலிவுட் இயக்குனரின் வினோத ஆசை
ஜீ கர்தா வெப் தொடரில் தமன்னா நடித்துள்ள ஆபாச காட்சிகளை சில கட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஜீ கர்தா வெப் தொடருக்கே ஷாக் ஆகும் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த மாத இறுதியில் தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற வெப் தொடரும் வெளியாக உள்ளது.
லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரின் முதல் பாகமே ஆபாச காட்சிகள் நிறைந்ததாக இருந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகமும் அதேபோன்று தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வெப் தொடரில் நடிகை தமன்னா தனது காதலன் விஜய் வர்மா உடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார். அதனால் இந்த வெப் தொடரும் வெளியாகி நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடியால் தான் அந்தப் படம் ஹிட் ஆகல... என்ன சுந்தர்.சி பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு