கொரோனா நிவாரண பணிக்காக மிகப்பெரிய தொகையை கொடுத்த லைகா நிறுவனம்..! எத்தனை கோடி தெரியுமா?

By manimegalai aFirst Published Jun 19, 2021, 12:48 PM IST
Highlights

தமிழக மக்களை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாடாய் படுத்து வரும் கொரோனா தொற்று நிவாரண பணிக்காக... முதல்வரின் நிவாரணம் பணிக்கு லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 

தமிழக மக்களை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாடாய் படுத்து வரும் கொரோனா தொற்று நிவாரண பணிக்காக... முதல்வரின் நிவாரணம் பணிக்கு லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக  மாற்ற மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மேல் முழு ஊரடங்கு போட்டதன் விளைவாக, தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைத்துள்ளது. எனவே அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன் லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.

பல பிரபலங்கள் இதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி வரும் நிலையில், தற்போது லைகா புரோடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன்  அவர்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடிக்கான காசோலையை லைகா நிர்வாகி GKM தமிழ்குமரன் மற்றும் நிருதன்,  கெளரவ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!