திரையரங்கில் வெளியாக தயாராகும் அருண் விஜய் படம்..!

By manimegalai aFirst Published Jun 19, 2021, 11:29 AM IST
Highlights

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

அருண் விஜய்யின் 31 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தின்  டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடட்பட்டது. 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான 'பார்டர்' வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் 'குற்றம் 23 ' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை துவங்குவதற்கு முன்பே படக்குழு முடிந்து விட்ட போதும், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை சற்று கட்டுக்குள் வந்து விட்டதால்.. விரைவில் தமிழக அரசு அடுத்தடுத்த தளர்வுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 'பார்டர்' படக்குழுவினர் ஓடிடியில் வெளியிடும் என்னத்தை கைவிட்டு விட்டு, திரையரங்கில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்டுடுகிறது. அதன் படி, ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!