விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக இணைந்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அஜித் படத்தில் இருந்து விலகிய பின்னர், இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளதாக அறிவித்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இயக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்திற்க்கு LIC என பெயரிடப்பட்ட நிலையில், இது பிரபல மத்திய அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நிறுவனத்தின் பெயர் என்பதால், ஒரு சில பிரச்சனைகள் வந்த நிலையில் பின்னர் இந்த படத்திற்கு LIC என்பதை LIK-வாக படக்குழு மாற்றியது.
இயக்குனரும் நடிகருமான, பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது. தற்போது இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. உயர்ந்த கட்டிடத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஆவாரை சுற்றிலும் சில ட்ரோன் கேமராக்கள் பறந்து கொண்டிருப்பது போலவும், அவர் கையில் வாட்ச் ஒன்றை வைத்திருப்பது போலவும் உள்ளது. சில இளைஞர்கள் மொபைல் பார்த்து கொண்டிருப்பதும் இந்த போஸ்டரில் உள்ளது.
அதிரடியாக சீரியலில் இறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்..! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
இளவட்ட ரசிகர்களை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருவது, இந்த போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார், யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ளும் நிலையில், இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார். \
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே வெளியான ஃபஸ்ட் லுக்கை தொடர்ந்து, செகண்ட் லுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இந்த படத்தை இயக்கி உள்ளார்.
Introducing the fabulous ⭐️
pic.twitter.com/AYLdwwQ4W0