- Home
- Gallery
- அப்பாவுக்கு ஜோடியாக சூப்பர் ஹிட் கொடுத்த தமிழ் நடிகை! மகனுக்கு ஜோடியாக நடித்த படம் செம்ம பிளாப்! யார் தெரியுமா
அப்பாவுக்கு ஜோடியாக சூப்பர் ஹிட் கொடுத்த தமிழ் நடிகை! மகனுக்கு ஜோடியாக நடித்த படம் செம்ம பிளாப்! யார் தெரியுமா
நடிகைகள் சிலர் அப்பா - மகன் என இருவருக்குமே ஜோடி சேர்ந்து நடித்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள். அந்த வகையில் அப்பாவுக்கு ஹிட் கொடுத்த நடிகை, மகனுடன் இணைந்து நடித்தபோது அந்த படம் படு ஃபிளாப் ஆனது. அவர் யார் என்பதை பார்க்கலாம்.

Heroines
தென்னிந்திய திரையுலகில், ஒரு ஹீரோவுக்கு ஹீரோயினாக, நடிக்கும் நடிகைகள் பின்னர் அம்மாவாகவும், சகோதரியாகவும் நடிப்பது உண்டு. ஸ்ரீ வித்யா, ரம்யா கிருஷ்ணன் என இதற்க்கு உதாரணமாக பல நடிகைகள் உள்ளனர்.
Rajinikanth
அதே போல் ஒரு நடிகைக்கு மார்க்கெட் இருக்கிறது என்றால்... அவரை வயசு வித்தியாசம் பார்க்காமல் தங்களுடன் நடிக்க அழைக்கும் ஹீரோக்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட விதிவிலக்கு இல்லை. 'லிங்கா' படத்தில், சோனாக்ஷி சின்ஹா ரஜினிக்கு நாயகியாக நடித்தது, மிகப்பெரிய விவாதத்திற்கு ஆளான பின்னரே... ரஜினிகாந்த் திருமணமான நடிகைகளுடன் ஜோடி சேர துவங்கினார்.
shruti haasan
அந்த வகையில் டோலிவுட் திரையுலகில், அப்பா நடிகருக்கு ஜோடி போட்டு ஹிட் கொடுத்த நடிகை, அவரது மகனுக்கு ஜோடியாக நடித்த படம் மோசமான தோல்வியை சந்தித்ததை சுட்டி காட்டும் விதமாக சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த நடிகை வேறு யாரும் அல்ல உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசன் தான்.
Veera simha reddy
ஸ்ருதிக்கு ஹாசனுக்கு தமிழை விட, தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. டோலிவுட் திரையுலகின் சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஜோடி போடும் இவர், கடந்த ஆண்டு பாலையாவுக்கு ஜோடியாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி, மிகப்பெரிய வெற்றிபெற்றது.
நிறைமாத நிலவாக எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா! வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
Jr NTR With Shruti Haasan
ஆனால், பாலையாவின் மகன் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக நடித்த ராமையா வஸ்தாவய்யா பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சீனியர் நடிகர்கள் ஸ்ருதி ஜோடி சேர்ந்தால் அந்த படம் வெற்றி பெறுகிறது. ஆனால் இளம் ஹீரோக்களுக்கு அவரின் லக் ஒர்க் அவுட் ஆகவில்லை என தெரிவித்து வருகிறார்கள்.