அதிரடியாக சீரியலில் இறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்..! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
நடிகர் அர்ஜுன் கூடிய விரைவில் சீரியல் களத்திலும் கால் பதிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Leo Movie Actor:
கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் சர்ஜா. ஜென்டில் மேன், முதல்வன், ரிதம், ஏழுமலை, ஜெய்ஹிந் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு வில்லன் மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.
Aishwarya Sarja and Umapathy marriage:
இவர் நடிப்பில் கடைசியாக விஜயுடன் நடித்த லியோ படம் வெளியான நிலையில், அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர விருந்து, மற்றும் தீயவர்கள் குலைகள் நடுங்க என்கிற படத்திலும் நடித்துள்ளார். நடிப்பில் மட்டும் இன்றி தன்னுடைய குடும்பத்தின் மீதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் அர்ஜுன், இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த மாதம் ப்ரமாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார்.
zee tamil serial
திருமணம் எளிமையான முறையில் நடந்தாலும், வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கூடிய விரைவில் சீரியலில் கால் பாதிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Survior show
அதாவது அர்ஜுன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம், சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த சீரியல்.... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அர்ஜுன் தொகுப்பாளராக மாறி 'சர்வைவர்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளனர். மேலும் அர்ஜுன் தயாரிக்க உள்ள சீரியலில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.