இயக்குநர் ராஜு முருகனின் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

By manimegalai a  |  First Published Nov 23, 2023, 11:24 PM IST

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
 


இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பராரி'. 'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கும் சொல் எனவே, அப்படி பட்ட எளிய மக்களை அடிப்படியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுளள்ளது.

 திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின்  வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும்  இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

Vijay: 'லியோ' பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தளபதி! வைரலாகும் போட்டோஸ்..!

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சுமார் ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர்  இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', NGK, 'தங்கலான்' போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் முதல் பார்வையை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு... படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

 

Honored to present the intense First Look of 👣

My hearty wishes to bro, bro, sir and the entire cast and crew of to be a big success🤗❤️ pic.twitter.com/glvDFHolll

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

 

click me!