அடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!

By manimegalai aFirst Published Sep 15, 2020, 7:16 PM IST
Highlights

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய, 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய, 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் செய்திகள்: நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகிய மகளா? கடற்கரையில் கவர்ச்சி உடையில் அமர்ந்து தெறிக்கவிடும் புகைப்படம்!
 

விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே, தளபதி விஜயுடன் இணைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க,  கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.  ஆனால் தற்போது இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி துவங்க முடியாத சூழல் உள்ளதால்  2021 ஆம் ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: ரம்யா கிருஷணன் பிறந்த நாள் ஸ்பெஷல்..! குடும்பத்துடன் ரம்யா கிருஷ்ணா இருக்கும் அரிய புகைப்பட தொகுப்பு!
 

மேலும் சமீபத்தில் வெளியான தகவலில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், இது கைதியின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரடி ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டார் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா?
 

அதில், நாளை 6 மணிக்கு, தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. 
 

I'm very happy to let you guys know that the Announcement of my next directorial venture will be out tomorrow at 6pm!

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

 

click me!