நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும்..! பிரபல நடிகர் கருத்து..!

By manimegalai aFirst Published Sep 15, 2020, 6:00 PM IST
Highlights

சூர்யாவின் அறிக்கைக்கு எதிர்ப்புகளை விட ஆதரவுகள் அதிகமாகவே இருந்த நிலையில், பிரபல நடிகை சௌந்தர் ராஜன். நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் நடைபெற்றன. நீட் தேர்வுக்கு எதிராக பல அமைப்புகள் தேர்வு மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் . சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றத்தின் நேர்மையையும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.  சூர்யாவின் இந்த கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வாசகங்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து  சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ​ நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போலவே, நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  

இதில் இருந்து, சூர்யாவின் அறிக்கைக்கு எதிர்ப்புகளை விட ஆதரவுகள் அதிகமாகவே இருந்த நிலையில், பிரபல நடிகை சௌந்தர் ராஜன். நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘சூர்யா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பாக அவர் கல்வித்துறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தன்னுடைய கருத்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த ரசிகர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சூர்யா சமூகத்தின் மீது மிகுந்தஅக்கறை கொண்டவர் என்றும் அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றும் நடிகர் சௌந்தரராஜா கூறியுள்ளார்

click me!