மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம்... சேட்டன்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகையின் அப்பா....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 15, 2020, 03:06 PM IST
மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம்... சேட்டன்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகையின் அப்பா....!

சுருக்கம்

ஷுட்டிங் நேரத்தில் கேரவனுக்குள் செல்ல முடியாத அளவிற்கு வாடை அடிக்கிறது என ப்ரொடக்ஷன் பையன்களை கூறும் அளவுக்கு மோசமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. 

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்தி திரையுலகின் பல்வேறு கறுப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. முதலில் பாலிவுட் மாஃபியாவால் சுஷாந்தின் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. அதன் பின்னர் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டினார். அதுபற்றி பல விஷயங்கள் சுஷாந்திற்கு தெரிந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

இதையடுத்து சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ரியா முக்கிய பிரபலங்கள் பலருடைய பெயரைக்கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கன்னட திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கன்னட திரையுலகைச் சேர்ந்த ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய நடிகைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ரகுல் ப்ரீத் சிங், நிக்கி கல்ராணிக்கும் தொடர்பு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

திரையுலகினரின் போதைப்பொருள் புழக்கம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி கிளம்பி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் தந்தை பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ் குமார், மலையாள திரைத்துறையிலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். 

 

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

ஷுட்டிங் நேரத்தில் கேரவனுக்குள் செல்ல முடியாத அளவிற்கு வாடை அடிக்கிறது என ப்ரொடக்ஷன் பையன்களை கூறும் அளவுக்கு மோசமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அந்த அளவுக்கு போதை பொருள் பயன்பாடு இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சுரேஷ் குமார் யார் பெயரையும் வெளிப்படையாக கூறாவிட்டாலும், மலையாள தேசத்தில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கேங்ஸ்டர் ‘கங்கா’வாக மாஸ் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா... டாக்ஸிக் படத்தின் அடிதூள் அப்டேட்
போலீஸ் அடிச்சா சிரிக்குறான்... ரவுடிகளால் எங்க ஏரியாவுக்கு ஆபத்து - ஆதங்கத்தை கொட்டிய சந்தோஷ் நாராயணன்