போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைக்கு காவல் நீட்டிப்பு... துருவி, துருவி விசாரணை நடத்தும் அதிகாரிகள்...!

Published : Sep 15, 2020, 11:50 AM IST
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைக்கு காவல் நீட்டிப்பு... துருவி, துருவி விசாரணை நடத்தும் அதிகாரிகள்...!

சுருக்கம்

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராகினி பெங்களூருவில் உள்ள  ​மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். 

கன்னட திரையுலகில் பகீர் கிளப்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகையான ராகினி திவேதிக்கும் இந்த கும்பலுடன் தொடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராகினி பெங்களூருவில் உள்ள ​மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ராகினி போலீசாரின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததை அடுத்து அவருடைய காவல் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

இவர்களின் காவல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததை அடுத்து, பெங்களூரு முதலாவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகினி திரிவேதி உள்ளிட்ட 8 பேரை ஆஜர்படுத்தினர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையில், ராகினியை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து ராகினியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?