பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவியில் வெளியாகும் புத்தம் புதிய படங்கள்! எந்தெந்த சேனலின் என்ன படம் தெரியுமா?

By manimegalai a  |  First Published Jan 14, 2023, 12:01 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்த தொகுப்பு இதோ...


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. உழைக்கும் விவசாயிகளின் அருமை பெருமைகளை போற்றும் விதமாகவும், உணவை உருவாக்கும் உழவனுக்கும், உழவர்களின் உற்ற நண்பனான மாடுகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புது பானையில் பொங்கல் வைத்து, குடும்பத்தோடு அன்றய தினம் மிகவும் மகிழ்ச்சியாக நம்பை கடந்து சென்றாலும், பெரியவர்கள் வரை இளைஞர்கள் வரை எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று, தொலைக்காட்சியில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் போடுவார்கள் என்பது பற்றி.

கிராமங்களில் பல்வேறு போட்டிகளுடன் பொங்கல் திருநாள் கடந்து சென்றாலும்... பெரும்பாலும் நகரங்களில் உள்ளவர்கள் பொங்கல், கரும்பு, மற்றும் புத்தாடை அணிந்து வீட்டில் இருக்கும் தெய்வத்தையோ அல்லது கோவிலுக்கு செல்வதை தவிர, வேறு எதிலும் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சிலர் வீட்டில் தங்களுக்கு கிடைத்த ஓய்வு நாளை அனுபவிக்க வேண்டும் என எண்ணி, வெளியில் எங்கும் செல்லாமல் தொலைக்காட்சியில் போடப்படும் புது படங்களை பார்க்கவே ஆர்வம் காட்டுவார்கள்.

Tap to resize

Latest Videos

இது போன்ற ஏராளமான ரசிகர்களை குறிவைத்து, இந்த பொங்கல் பண்டிகைக்கு பல புதுப்படங்கள் டிவியில் ஒளிபரப்பப்பட்டு உள்ளன. என்னென்ன படங்கள்... எந்த தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறித்து பார்ப்போம்...  

சன் டிவி:

ஜனவரி 15ஆம் தேதி, சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இதை தொடர்ந்து சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மாலை 2:30 மணிக்கும், தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 6:30 மணிக்கும்  ஒளிபரப்பாகிறது.

ஜனவர் ஜனவரி 16 அன்று சன் டிவி தொலைக்காட்சியில், ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படம் காலை 11 மணிக்கும், விஜயின் 'தெறி' திரைப்படம் மாலை 2:30 மணிக்கும், நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'லத்தி' திரைப்படம் மாலை 6:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

இதை தொடர்ந்து சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியில், ஜனவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா, நடிப்பில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதை தொடர்ந்து கன்னட திரை உலகில் ரிஷப் செட்டி இயக்கி நடித்து வெளியாகி, தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெட்ரா 'காந்தாரா' திரைப்படம்  மாலை 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'RRR'  திரைப்படம் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று நடிகர் அருண் விஜய்யுடன் அவருடைய மகன், நடித்த  'ஓ மை டாக்' திரைப்படம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  இதைத் தொடர்ந்து கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான 'விருமான்'திரைப்படம் 12:30 மணிக்கும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி... இமாலய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படம் மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவி தொலைக்காட்சியில், ஜனவரி 15ஆம் தேதி அன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'டான்' திரைப்படம் காலை 10:00 மணிக்கும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சூப்பர் ஹிட் வெற்றி வெற்றி பெற்ற, 'லவ் டுடே' திரைப்படம் மாலை 1.30 மணிக்கும்  ஒளிபரப்பாகிறது.

ஜனவரி 16ஆம் தேதி அன்று சுந்தர் சி-யின் 'அரண்மனை 3' திரைப்படம் 10:00 மணிக்கும், சிம்பு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து, மிரட்டலான வெற்றியை கண்ட 'வெந்து தனித்தது காடு' திரைப்படம் 1:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்... சமீபத்தில் வெளியான 'காபி வித் காதல்' திரைப்படம் 12 முப்பது மணிக்கும், நடிகர் அருண் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'யானை' திரைப்படம் 3:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

ஜனவரி 16ஆம் தேதி அன்று பிரபு தேவா நடித்த 'மை டியர் பூதம்' திரைப்படமும், சசிகுமாரின் 'காரி' திரைப்படம் 3:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 

 


 

click me!