
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்த 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படங்கள், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இரு தரப்பு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிய இந்த இரண்டு படங்களுக்குமே, தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வெளிநாடு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே முதல் நாளில், பிரமாண்ட ஓப்பனிங் கண்ட நிலையில், இரு படங்களுமே சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இரு படங்களுக்குமே, ஒரு தரப்பு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனம் தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பு ரசிகர்கள்... கலவையான விமர்சனங்களை கூறி வருவதால் இரண்டாவது நாள் கலெக்ஷன் குறைந்தது. இதுகுறித்து வெளியான தகவலில் இரண்டாவது நாளில், துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களுமே 15 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தமிழகத்தை பொறுத்தவரை இரு படங்களுமே, கிட்ட தட்ட சமமான வசூலை வாரி குவித்து வரும் நிலையில்... அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால்... இரண்டு படங்களின் வசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வாரிசு மற்றும் துணிவு படங்கள், சிங்கப்பூரில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி துணிவு திரைப்படம் $325K வசூல் வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் $275K வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் விஜய்யின் வாரிசு, துணிவை நெருங்க முடியவில்லை என்பது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.