துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு… இணையத்தில் வைரல்!!

By Narendran S  |  First Published Jan 13, 2023, 11:03 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைபடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!

Tap to resize

Latest Videos

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!

இந்த படம் கடந்த ஜன.11 ஆம் தேதி வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இதனை இணையத்தில் பகிர்ந்து வருவதால் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வைரலாகியுள்ளது. 

click me!