கசந்து போன நடிகை ரேவதியின் வாழ்க்கை..!கண்ணீர் பக்கங்கள்..!

 
Published : Nov 28, 2017, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கசந்து போன நடிகை ரேவதியின் வாழ்க்கை..!கண்ணீர் பக்கங்கள்..!

சுருக்கம்

Life of Revolt Actress Revathy Tear pages

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்  நடிகை ரேவதி. இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன் உள்ளிட்ட  80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

 

ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவர், நடிப்பு... இயக்கம்... என  சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் தோல்வியைப் பெற்றார்.

1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனன்  என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால்  இவர்களுடைய திருமண பந்தம்  வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான்  வருத்தம்.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாக ரத்தைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தார். அவருக்கு மகி என்று பெயர் சூட்டியுள்ளார். ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒரு சில வருடங்களாக மீண்டும் தன்னுடைய கணவருடன் நட்பு ரீதியாகப் பழகி வருகிறாராம். 

நடிகை ரேவதி போல் திரையில் ஜொலிக்க வேண்டும் என நினைக்கும் கதாநாயகிகள் பலர் உள்ளனர். மேலும் சமந்தா போன்ற நாயகிகள் ரேவதி நடித்த படங்களைப் பார்த்து தான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக கூறியுள்ளனர். 

பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் ரேவதிக்கு... எல்லாம் கிடைத்தும் மண வாழ்க்கை  கசப்பானதாக மாறிவிட்டது... இதுவே இன்று வரை அவர் கண்ணீருக்கும் காரணமாக இருந்து வருகிறது என அவருடைய நட்பு வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?