26 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - மம்மூட்டி..!

 
Published : Nov 28, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
26 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - மம்மூட்டி..!

சுருக்கம்

rajini and mamooty join again

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  1991-ம் ஆண்டு ரஜினியும், மம்மூட்டியும் நடித்த `தளபதி’ திரைப்படம்  வெளியாகி  மிகப்பெரிய வெற்றி பெற்றது.


 நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளனர்.  ரஜினியும், மம்மூட்டியும் இந்த படத்தில் இணைபிரியாத நண்பர்களாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 


கோலிவுட்  சூப்பர் ஸ்டாரும், கேரள சூப்பர் ஸ்டாரும்   இணைந்து நடித்த `தளபதி’ படத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில்  மிக பெரிய வரவேற்பு கிடைத்தது.  இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் வேறு எந்த படத்திலும் உச்ச கட்ட நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கவில்லை. 


மம்மூட்டி ஒரு சில தமிழ்  படங்களில் நடித்தாலும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை  . இந்நிலையில் தற்போது தளபதி திரைப்படம் வெளியாகி  26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து  மராத்தி படத்தில் நடிக்க  உள்ளனர். 


இந்த படத்தை தீபக் பாவேஷ் என்கிற மராத்தி இயக்குனர்  இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்திற்கு `பஷாயதன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
வாய்ப்பில்ல ராஜா... குணசேகரன் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சாமியாடி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்