Leo Trailer: Badaas பாடலை தொடர்ந்து... ட்ரைலரில் மிரட்ட வரும் Leo Das! 'லியோ' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By manimegalai a  |  First Published Oct 2, 2023, 5:27 PM IST

'லியோ' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவலை, தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
 


விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள, 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்நிலையில் சற்று முன்னர், 'லியோ' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி 'லியோ' படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என, புதிய போஸ்டருடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 'லியோ' ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதால், தளபதி ரசிகர்கள் கடும் அப்சட்டில் இருந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக 'லியோ' படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடலான Badass பாடல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Tap to resize

Latest Videos

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா? இது தெரியாம போச்சே.. வைரலாகும் போட்டோஸ்!

இதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை மணிக்கு ட்ரைலர் ரிலீஸ் ஆகும், என்பது குறித்து தகவல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?

'லியோ' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் பூஜை இன்று பிரசாத் லேபிள் மிகவும் எளிமையான முறையில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த அப்டேட் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு பின்னரே வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Your order is being prepared 😎 is on its way! Get ready to enjoy your meal 🔥

Unga delivery partner will deliver them on October 5th 😉 sir … pic.twitter.com/xgHzueGWpJ

— Seven Screen Studio (@7screenstudio)

 

click me!