தளபதி விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், எங்கு என்ன நிலவரம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் சற்று முன்னர் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 45 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களில் மக்கள்... வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தளபதி ரசிகர்கள் பலர்... லியோ திரைப்படம் காஷ்மீரில் நடந்து வருவதனால் இதுகுறித்து படக்குழுவினர் பத்திரமாக உள்ளார்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 'லியோ' படக்குழுவினர் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவலில், லியோ குழுவினர் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், அவர்கள் இந்த நடுக்கத்தை, பலத்த காற்று என்று தவறாகக் கருதியதாகவும், பின்னர் தான் அது.. நிலநடுக்கம் என தெரிந்து, ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி கீழ்தளத்திற்கு வந்துள்ளனர்.
44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
மேலும் தளபதி விஜய் முதல் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதமே இப்படத்தில் வில்லன்களாக நடித்த, கெளதம் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் அவரவரர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் லியோ படக்குழுவில் இணைந்து நடித்து வருகிறார், அதே போல் தளபதி விஜய், திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தற்போது காஷ்மீரில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.