சமீபத்தில் ஆஸ்கர் விருதை பெற்ற, நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்றாப்போல் டெஸ்லா நிறுவனம்..ஆயிரக்கனமான கார்களில் வண்ணமயமான விளக்குகளை இசைக்கு ஏற்றாப்போல் ஒளிர செய்து பிரமிக்க வைத்துள்ளது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'RRR'. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தில் நடித்திருந்த, ராமசரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்தது.
இந்நிலையில், இந்த படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும்... 'நாட்டு நாட்டு' பாடல் தென்னிந்திய திரையுலகை தாண்டி, ஹாலிவுட் ரசிகர்களாலும் ரசிக்கும் விதத்தில் இருந்தது. இந்நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கரில் ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில், ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை பெற்ற நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
Breaking: 'அசத்தப்போவது யாரு' ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா அதிர்ச்சி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
தற்போது இந்த பாடலுக்கு பல ரசிகர்கள் நடனமாடியதை தொடர்ந்து, டெஸ்ட்டா நிறுவனம் கார்களின் லைட்டை ஒளிரவைத்து அமர்க்கள படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இதோ..