Breaking: 'அசத்தப்போவது யாரு' ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா அதிர்ச்சி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

By manimegalai a  |  First Published Mar 21, 2023, 6:41 PM IST

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன், கோவை குணா உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
 


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அசத்த போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா. மிமிக்கிரி கலைஞராகவும் கலக்கி வந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

கோவை குணா மதுரை முத்துவுடன் இணைந்து, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய ஈடு இணையில்லா காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளதால் இவருக்கு வெளிநாடுகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!