சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

Published : Sep 17, 2022, 01:45 PM ISTUpdated : Sep 17, 2022, 09:03 PM IST
 சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

சுருக்கம்

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி உடல்நிலை கவலைக்கிடமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த காலத்திலேயே கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை ஜெய்குமாரி, வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் அதிகமாக இவர் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகையான ஜெய்குமாரி 70 வயதிற்கு மேல் ஆகிறது. இவர் சென்னை வேளச்சேரியில் தனது மகனுடன் வசித்து வந்தார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என கூறப்படுகிறது.  தந்தை இறந்து விட்ட காரணத்தால் ஆறு வயது சிறுமியாக இருந்தபோதே மக்கள் ராஜ்யக்கு என்னும் கண்டன படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளாதாகவும், நாடோடி தான் இவரின் முதல் தமிழ் படம்  அப்போது அவருக்கு 14 வயது அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும் நடிப்பதை விட கவர்ச்சி நடனத்திற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் நடமாடுவதில் ஆர்வம் காட்டினேன் என முன்பு  ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?

மேலும்  நான் நடித்து சம்பாதித்து இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் யாரும் இப்போது எனக்கு உதவ முன்வரவில்லை. என்னுடைய 25 வயதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு சஜிதா, பானு என்ற இரு மகள்களும் ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தார். என் கணவர் சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்தார் முன்னொரு காலத்திலேயே என்னும் படத்தை தயாரித்தோம். ஆனால் படம் முடிவடைந்த நிலையில் பைனான்ஸியருக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த கவலையில் தான் எனது கணவர் மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்: மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!

அதன் பிறகு என் வாழ்க்கை சோதனைக்கு உள்ளானது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் மூன்று கார்கள் வைத்திருந்தேன். மூன்று கார்களையும்  விற்று தான்வாடகை வீட்டிற்கு குடியேறினேன்.   கஷ்டப்பட்டு இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். இரண்டு மகள்களும் என்னை கவனிப்பதில்லை. எந்த உதவியும் செய்வதில்லை. நானும் என் மகனும் வேளச்சேரிகள் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறோம் என கூறியிருந்தார். 

இந்நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழ நிலையில் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ஜெயக்குமாரி.  இவர் நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தால், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லட்சுமி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் உள்ளிட்ட பல பிளாக் பாஸ்டர் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த  பழம்பெறும் நடிகையான ஜெயக்குமாரி உதவிக்கு யாரும் இல்லாமல் உயிருக்கு போராடிவரும் நிலையை அறிந்து நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்கிற  உதவிக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!