
ஒரு கால் பண்ணுங்க போதும் உங்கள் வீடு தேடி மரக்கன்று கொண்டு வந்து தருகிறோம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனவே புதிய மரங்களை நடவேண்டும் என்பதில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அக்கறை காட்டியுள்ளார். இதற்காக இலவச மரக்கன்றுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார். தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப்படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து இலவச மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.