
இந்திய திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் அனைவர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள பாலிவுட் 'கான்' நடிகர்களே ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர்கள் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அமீர்கானும் இதே விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'யுத்தம்' (டங்கல்) திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் செய்திக்குறிப்பில் அமீர்கான் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் பற்றி அவர் கூறியபோது, ஆண் - பெண் இருவருமே சமம் என்பது தான் 'யுத்தம்' (தங்கல்) படத்தின் கதை கரு என்றும்
நம் இந்திய நாட்டில் ஏராளமான, திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஈடு இணையாக, எந்த விதத்திலும் குறைவின்றி விளையாட்டு வீராங்கனைகள் உதயமாக வேண்டும், .உதயமாவார்கள், விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை 'யுத்தம்' (தங்கல்) போன்ற திரைப்படங்கள் அவர்களின் உள்ளத்தில் விதைக்கும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.