
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி என்கிற சின்னத்திரை தொடருக்கு, இன்று பல இளைஞர்கள் கூட ரசிகர்கள் தான்.
அந்த அளவிற்கு மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
தற்போது நாகினியின் இரண்டாவது பாகம், படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சுதா சந்திரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நாடகத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்கறது . அப்போது சுதா சந்திரன் கையில் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்து கொண்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த அந்த நாடகத்தின் இயக்குனர் குஷால் இது பற்றி சுதாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதா சந்திரன், ஷூட்டிங் நடக்கும் இடத்தில ஸ்கிரிப்ட் பேப்பர் கையில் வைத்திருக்காமல் பீர் பாட்டில் வைத்திருப்பார்களா என கோபமாக கூறியுள்ளார்.
மேலும் தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் போது, செல் போன் கூட தொட மாட்டேன் என்றும், ஸ்கிரிப்ட் கொடுத்தவுடன் ஒரே ஒரு பார்வையில் யாராலும் வசனங்களை படித்து விட முடியாது என குஷாலை திட்டி தீர்த்து விட்டார்.
இந்த பிரச்சனை பற்றி அறிந்த பாலாஜி டெலிபிலிம்ஸ் அதிகாரிகள் அங்கு வந்து, இயக்குனரயும், சுதா சந்திரனையும் சமாதான படுத்தி, சுதாவை கேரவனுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த பிரச்னையால் ஒரு வேலை சுதா இந்த சீரியலை விட்டு விலகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.