
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது நடிகர்சங்க செயலாளர்ராகவும் உள்ளார்.இவரின் கட்டுப்பாட்டில் தான் தற்போது நடிகர் சங்கம் உள்ளது என சிலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவர் திருட்டு விசிடிக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். அதுமட்டும்மில்லாமல் தடாலடியாக சில கடைகளில் புகுந்து ரெய்டு செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இந்த வாரம் விஷால் நடிப்பில் கத்திச்சண்டை திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது.
அதனால் தனியார் பேருந்துகளில் புது படங்கள் போடுவதை நிறுத்தும் வகையில் விஷால் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் தமிழ் சினிமாவை நம்பி பல குடும்பங்கள் உள்ளன, ஆகையால் உங்களது தனியார் பேருந்துகளில் புது படம் போடுவதை நிறுத்த ஆவனசெய்யும்படி தயவு கூர்ந்து கேட்டுகொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.