அத்திவரதரை தரிசிக்க வந்த லதா ரஜினிகாந்த்...விரைவில் சூப்பர்ஸ்டாரும் வருகிறார்?

Published : Jul 23, 2019, 01:13 PM IST
அத்திவரதரை தரிசிக்க வந்த லதா ரஜினிகாந்த்...விரைவில் சூப்பர்ஸ்டாரும் வருகிறார்?

சுருக்கம்

தமிழகத்தின் அத்தனை வி.ஐ.பி.களும் அத்திவரதரை தர்சித்துவரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் நேற்று தரிசனம் செய்தார். அவரைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியும் வர உள்ளதாக ராகவேந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தமிழகத்தின் அத்தனை வி.ஐ.பி.களும் அத்திவரதரை தர்சித்துவரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் நேற்று தரிசனம் செய்தார். அவரைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியும் வர உள்ளதாக ராகவேந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து  தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் 'ஆன்லைன்' டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை விரைவாக தரிசிக்க முதலில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் 1000 பேராக உயர்த்தப்பட்டு தற்போது ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத் துறை  இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களோடு சேர்ந்து மிக முக்கியமான வி.ஐ.பிகளும் தரிசனத்துக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று இரவு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தனது மகள்களுடன் சென்ற நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன், லதா ரஜினிகாந்த் அத்திவரதரை மனமுருக வழிபட்டார். அவரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும்  விரைவில் அத்திவரதரை தரிசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி