
தான் இந்திய பிரதமரானால் சினிமா துறையிலுள்ள யார் யாருக்கு எந்தெந்த அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் பிரபல நடிகையும் தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருபவருமான கங்கனா ரனாவத்.
தமிழில் ஜெயம் ரவியுடன் ’தாம் தூம்’ படத்தில் அறிமுகமானவர் கங்கணா ரனாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கணா எப்போதுமே சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர். விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் கங்கனா ரனாவத் ராஜ்குமார் ராவுடன் நடித்துள்ள ’ஜட்ஜ்மென்டல் ஹை கியா’ என்ற இந்தி படம் வரும் 26-ந்தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தை விளம்பரம் செய்ய கங்கனா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில் ‘உங்களை இந்தியாவின் பிரதமராக நியமித்தால் யார், யாருக்கு எந்த துறை ஒதுக்குவீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் சர்ச்சையாகிவிட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அவர்,’ நடிகர் அக்ஷய் குமாருக்கு தான் சுகாதார துறையை ஒதுக்குவேன். ஏனென்றால் அவர் மது அருந்த மாட்டார், புகை பிடிக்க மாட்டார். பார்ட்டிகளுக்கு சென்றால் இரவு 9.30 மணிக்கு கிளம்பி விடுவார். சரியாக 10 மணிக்கு தூங்கும் பழக்கம் உள்ளவர்.நடிகை கரீனா கபூருக்கு உள்துறை அமைச்சகத்தை கொடுக்கலாம். அவர் வீட்டையும் கவனித்துக் கொண்டு, சினிமாவிலும் கவனம் செலுத்துகிறார். ஷாருக்கானுக்கு தான் நிதி அமைச்சகம் கொடுக்கப்பட வேண்டும்.அவர் சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளார். பணக்கார பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஷாருக். அதனால் நிதித் துறையை அவர் நிச்சயம் நல்லபடி பார்த்துக் கொள்வார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகருக்கு கொடுக்க வேண்டும்.ஏனென்றால் புறம் பேசுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.அதனால் அவரை தவிர வேறு யாராலும் இந்த துறையை நன்றாக கவனிக்க முடியாது.நடிகர் ரன்பீர் கபூருக்கு பாதுகாப்பு துறையை ஒதுக்க வேண்டும். அவர் யாருக்கும் தெரியாமல் ஒரு பி.ஆர். குழுவை வைத்து அடுத்தவர்களின் பெயரை கெடுக்கிறார். அதாவது முதுகில் குத்துகிறார்’என்று தனது மந்திரி சபை குறித்து வஞ்சகமில்லாமல் கங்கனா ரனாவத் கமெண்ட் அடித்திருப்பது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.