
மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து சற்று கடுமையாக விமர்சித்ததால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவுக்கு இன்று 45 வது பிறந்தநாள். இவ்வளவு வருடங்களாக இல்லாமல் இம்முறை சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் அவர் மேல் எழுந்துள்ளது.
அவரது 45 வது பிறந்தநாளை ஒட்டி சூர்யா குறித்த ஒரு சில குறிப்புகள்...சரவணன் என்கிற இயற்பெயர் கொண்ட சூர்யா துவக்கத்தில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வமில்லாத இருந்தார். வேலை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கார்மெண்ட் ஃபேக்டரியில். அவருக்கு வந்த முதல் பட வாய்ப்பு வஸந்த் இயக்கத்தில் ‘ஆசை’படம்.அப்படத்தில் அவர் நடிக்கத் தயங்கியதால்தான் அஜீத்துக்கு அந்த வாய்ப்பு போனது. அடுத்து மீண்டும் அதே வஸந்தின் ‘நேருக்கு நேர்’படத்தில் 1997ம் ஆண்டு சூர்யா அறிமுகமானபோது அவருக்கு வயது 22.
துவக்கத்தில் சில படங்களில் சோபிக்காமல் போன சூர்யாவுக்கு முதல் பிரேக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. படம் ’நந்தா’.அப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றார் சூர்யா. இந்த ‘நந்தா’வில் சூர்யாவுக்கு முன்னர் நடிப்பதாக இருந்தவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். அடுத்து அமீரின் ‘மவுனம் பேசியதே’படத்திலும் நல்ல பெயர் வாங்கிய சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். கவுதம் வாசுதேவ மேனனின்’காக்க காக்க’ மீண்டும் பாலாவின் பிதாமகன்’, கே.வி.ஆனந்தின் ‘அயன் போன்ற படங்கள் சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள்.
தன்னுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகாவை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவாக சர்ச்சைகள் எதிலும் சிக்கிக்கொள்ளாத சூர்யா உடன் நடித்த எந்த நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படாத ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமைக்குரியவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.