
ஆந்திராவில் பிறந்த பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த 1966ம் ஆண்டு தனது இருபதாவது வயது முதல் பாடகர் கலை உலகில் பயணிக்க தொடங்கினார். 16 மொழிகளில் 52,000திற்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வெகு சில மனிதர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.
கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி ஒரே நாளில் (காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை) கன்னட மொழியில் 27 பாடல்களை பாடி மிகப்பெரிய சாதனை படைத்தவர் SPB. அதுமட்டுமல்லாமல் ஒரே நாளில் தமிழில் 19 பாடல்களும் ஹிந்தியில் 16 பாடல்களும் ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்த ஒரே பாடகர் எஸ் பி பி என்றால் அது மிகையல்ல.
ஆறு தேசிய விருதுகள் உட்பட ஒரு பத்மஸ்ரீ, ஒரு பத்மபூஷன், ஒரு பத்மவிபூஷன், நான்கு கௌரவ டாக்டர் பட்டங்கள், ஒரு கலை மாமணி என்று விருதுகளை பல மொழிகளில் குவித்த ஒரே பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் மட்டும் தான். 3 தலைமுறைகளுக்கும் மேலாக எண்ணற்ற முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்து நீங்காத புகழோடு வளம் வந்து எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி சென்னையில் காலமானார்.
இந்நிலையில் அவரோடு பல படங்களில் ஒன்றாக பயணித்து அவருக்கு மிகவும் பிடித்தமான பாடகிகளில் ஒருவராக வலம் வந்த சின்னக் குயில் சித்ரா, சொர்க்கத்தில் இருக்கும் உங்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படமின்றி பகிர்ந்து தனது நினைவுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் டி இமானின் இசை நிகழ்ச்சி... கடைசி நேரத்தில் ரத்து - காரணம் என்ன?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.