- Home
- Gallery
- சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் டி இமானின் இசை நிகழ்ச்சி... கடைசி நேரத்தில் ரத்து - காரணம் என்ன?
சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் டி இமானின் இசை நிகழ்ச்சி... கடைசி நேரத்தில் ரத்து - காரணம் என்ன?
திருச்சியில் சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் நடைபெற இருந்த டி இமானின் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்.

d imman
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே அமைந்துள்ள ஜேஜே பொறியியல் கல்லூரியில் இசையமைப்பாளர் டி இமான் இன்னிசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக 8500 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணி அளவில் பலத்த காற்று வீசத் துவங்கியது. பின்பு கனமழையும் பெய்ய தொடங்கியது.
D Imman music concert
மேடை திறந்து வெளியாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்ஈடி விளக்கு கம்பங்கள், தகர சீட்டுகள் , சாய்ந்து விழும் நிலைக்கு சென்றது. ரசிகர்கள் மழை மற்றும் காற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அங்கு இங்குமாக ஓடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்... தெறி பேபி வந்தாச்சு... நேற்று சிவகார்த்திகேயன்... இன்னைக்கு இவரா? குழந்தை பிறந்த குஷியில் பிரபல மாஸ் ஹீரோ
D Imman music concert cancelled
பின்பு கல்லூரி வளாகத்திற்கு உள்ளே உள்ள இடத்தில் நூற்றுக்கணக்கானோர் மழையில் முழுவதும் நனைந்து உள்ளே ஓடி வந்து நின்றனர். நிகழ்ச்சியை பார்த்து இன்னிசை மழையில் நனையலாம் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அனைத்தும் தவிடு பொடியாகியது. முன்னதாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் ஒலி ஒளி அமைப்புகளுக்குரிய ஜெனரேட்டர் தீ பற்றி எரிந்தது.
Sivakarthikeyan, D Imman
அதனை அங்கு உள்ளவர்களே அணைத்தனர். முதலில் தீ பின்பு மழை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பெரும் அப்செட்டுக்கு ஆளாக்கியது இந்த இசை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ரத்தானதால் அங்கு வந்த ரசிகர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பும் சூழல் உருவானது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த கல்லூரியில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; போதைக்கு அடிமையாகி மீண்ட இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி யார் தெரிகிறதா?