- Home
- Gallery
- செம வெயிட்டு பார்ட்டியா இருக்காங்களே... 40 வயதாகும் நடிகை பிரியாமணி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
செம வெயிட்டு பார்ட்டியா இருக்காங்களே... 40 வயதாகும் நடிகை பிரியாமணி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
தமிழ், தெலுங்கி, இந்தி என பான் இந்தியா நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியாமணியின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

Priyamani
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி. இதையடுத்து பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியாமணிக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது பருத்திவீரன் திரைப்படம் தான். அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த அப்படத்தில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி.
Actress Priyamani
பருத்திவீரன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்த பிரியாமணி, தமிழில் நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை என அவ்வப்போது மட்டும் நடித்து வந்தார். மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த பிரியாமணி, தற்போது கொட்டேஷன் கேங் என்கிற படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... வியர்ட் புரோபோசல்... லவ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க பரீனா சொன்ன பொய்? மருத்துவமனையில் அட்மிட்டான நபர்!
Priyamani Salary
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்திருக்கிறார். அங்கு அவர் நடித்த பேமிலிமேன் என்கிற வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்தியில் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜவான் படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Priyamani Net Worth
நடிகை பிரியாமணி கடந்த 2017-ம் ஆண்டே முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் பிசியாக நடித்து வரும் பிரியாமணிக்கு தற்போது 40 வயது ஆகிறது. இந்த வயதிலும் பல கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கிறார் பிரியாமணி. ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வரும் அவரின் சொத்து மதிப்பு ரூ.60 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இவருக்கு சொந்தமாக சொகுசு பங்களாவும் இருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்... Roja Selvamani : வாடிய ‘ரோஜா’... நகரி தொகுதியில் இனி வெற்றிக்கு வாய்ப்பில்ல... தோல்வி முகத்தில் நடிகை ரோஜா